எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி எட்டரை கிலோ கிராம் பன்றி இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (10) மாலையில் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 29வயதுடைய நபர் ஒருவரேயே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் கந்தளாயில் இருந்து அக்போபுரவிற்கு மோட்டார் சைக்கிளில் அனுமதிப்பத்திரமின்றி எட்டரை கிலோ பன்றி இறைச்சியை கொண்டு சென்ற போதே போக்குவரத்துக் கடமையில் இருந்த பொலிஸாரால் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.