கண்ணகி அம்மன் ஆலய எண்ணெய்க் காப்பு..!

த.நவோஜ்-
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலய கும்பாபிஷேக எண்ணெய் காப்பு மற்றும் பால் காப்பு சாத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

புதன்கிழமை கிரியைகளுடன் ஆரம்பமாகி வியாழக்கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன், வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதன்போது விநாயகர் மற்றும் நாகதம்பிரான் விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பும், கண்ணகி அம்பாள் விக்கிரகத்திற்கு பால் காப்பும் பக்த அடியார்களால் சாத்தப்பட்டது.

இதில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பக்த அடியார்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதலை வேண்டி எண்ணெய் காப்பு சாத்தினர்.

இக்கிரியைகள் யாவும் கிரயாபூசகர, ஆச்சாரியா, இளஞ்சுடர் சிவஸ்ரீ.நவரெத்தின முரசொலிமாறன் குருக்கள் மற்றும் ஆலய பூசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோரால் நடைபெற்றது.

கும்பாபிஷேகம் முடிவுற்றதும் தொடர்ந்து மண்டல பூசைகள் நடைபெற்று 2016.05.16ம் திகதி பால் குடபவனி மற்றும் சங்காபிஷேகம் என்பன நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -