பத்து வருடங்களின்பின் அம்பாறையில் மீளுயிர்பெற்றது சென்.ஜோன் அம்புலன்ஸ் முதுலுதவிப்படையணி..!

காரைதீவு நிருபர் சகா-
லங்கை சென்ஜோன்ஸ் முதலுதவிப்படையணி அம்பாறை மாவட்டத்தில் சுமார் பத்து வருடங்களின்பின் மீண்டும் புத்துயிர்பெற்றுள்ளது.
அது தொடர்பான விசேட மாவட்டமட்டக்கூட்டம் சம்மாந்துறை ஒலிவ் விடுதியில் சனிக்கிழமையன்று பகல் படையணியின் அம்பாறை மாவட்ட தலைவர் ஜ.எல்.ஜலீல் தலைமையில் நடைபெற்றது.

சென்ஜோன் அம்புலன்ஸ் படையணியின் இலங்கைக்கான பணிப்பாளரும் நிருவாகச்செயலாளருமான ரி.பாறூக் ஜாயா பிரதான அதிதியாகக் கலந்துகொண்டு விளக்கமளித்தார். 

முன்னதாக சம்மாந்துறை வலய மாவட்டஆணையாளர் வாபிநௌசாட் உதவிஆணையாளர்களான எஸ். தஸ்தகீர் எம்.ஜ.றிபாய் கே.எம்.எஸ். நஜ்ஜாஸ் ஏ.இராஜேஸ்வரி பிரிவுஅத்தியட்சகர் எ.எம்.பரீட் ஆகியோர்கலந்துகொண்ட கூட்டம் சமாதானகற்கைநிலையத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறையிலுள்ள பயிற்சிமத்தியநிலையத்தை மீட்டெடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் அங்கு நடைபெற்றது.

மாவட்ட முகாமைத்துவக்குழுவிற்கான கூட்டத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அம்பாறை வலயக்கல்விப்பணிப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா டாக்டர் எ.எம்.எம்.எ.றசீட் ஓய்வுநிலை கல்விப்பணிப்பாளர் எஸ்.எல்.ஆதம்பாவா உதவிக்கல்விப்பணிப்பாளர் எ.முஸ்ராக் அலி டாக்டர் எஸ்.எல்.றியாஸ் பிரதிக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.உமர்மௌலானா அதிபர் எஸ்.ரவீந்திரன் சிரேஸ்ட ஆசிரியை சுல்பிகாசரீப் களஅலுவலர் எஸ்.சிசிலியா உதவிக்கல்விப்பணிப்பாளர் கே.பிரேமானந்தா வங்கி அலுவலர் எ.எம்எ.றசீட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படையணியின் மாவட்ட இணைப்பாளர்கள் உதவி இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

பாடசாலை மாணவர் இளைஞர்கள் மற்றும் வயதுவந்தோர் மத்தியில் முதலுதவி பயிற்சியளித்தல் சிறுவர்நலன்புரி இல்லதாதி முறைமை அனர்த்த முன்பாதுகாப்பு பயிற்சி போன்ற பல பயிற்சிகளை இவ்வாண்டில் ஜருராக நடைமுறைப்படுத்த இம்மாவட்ட குழுவை பூரணமாகப்பயன்படுத்த வேண்டும் என அங்கு கூறப்பட்டது.

இச்சக்திவாய்ந்த மாவட்டகுழு இதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென பணிப்பாளர் ரி.ஜாயா வேண்டுகோள்விடுத்தார்.

அதற்காக சம்மாந்துறையிலுள்ள சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ்ஸின் மாவட்ட பயிற்சி நிலையத்தை மீளப்பெற்று முற்றாகப்பயன்படுத்தவேண்டுமெனவும் அதற்காக ஒரு உயர்மட்டக்குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடசாலைமட்டத்தில் சென்ஜோன்ஸ்படைப்பிரிவை ஸ்தாபிக்க வலயக்கல்விப்பணிப்பாளர்கள் பூரண விருப்பத்தையும் சம்மதத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க இணக்கம் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரும் இதற்கான பரிபூரண அனுமதியை வழங்கியுள்ளதாக அங்கு கூறப்பட்டது.

மொத்தத்தில் அம்பாறை மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களின்பின் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியின் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -