ஆறுகளை அண்டிய மறுவயற் பயிர்ச்செய்கைக்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு..!

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஹூலானுகே பிரதேசத்தில் ஆறுகளை அண்டிய மறுவயற் பயிர்ச்செய்கைக்கான உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வு PSDG திட்டத்தின் கீழ் ஆறுகளை அன்டிய பிரதேசங்களில் மறுவயற் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்காக ஹூலானுகே விவசாய விரிவாக்கல் நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு உள்ளீடுகளை வழங்கும் நிகழ்வானது லாகுகல உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்தில் விவசாயப் போதனாசிரியர் திரு எச்.ஏம்.ஏம் இர்சாத் தலைமையின் கீழ் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அதிதியாக லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஐ.எம் இஸ்மாலெப்பை அவர்களும் ஹூலானுகே விவசாயப் போதனாசிரியர் ,மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் நோக்கங்களையும் எதிர் வரும் காலங்களில் கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றி லாகுகல வலய உதவி விவசாயப் பணிப்பாளர் கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -