போலி பேஸ்புக் நபரை கைது செய்ய உத்தரவு..!

போலியான முகநூலின் மூலம் பலரை அச்சுறுத்தி வந்த நபர் என்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சந்தேகிக்கப்படும் நபரை, கைது செய்யுமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் வரும் போதோ கைது செய்யபப்டவேண்டும் என்று, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு, நீதவான் பணித்துள்ளார். பெண் என்று குறிப்பிட்டு போலியான முகநூலைக்கொண்டு பல பணக்காரர்களுடன் நண்பர்களாகி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து பணம் பறித்து வந்த நபரை கைது செய்வதற்கே உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மாறி மாறி இருந்துகொண்டு குறித்த முகநூலை இயக்கி வருகின்றமை தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த 17ஆம் திகதி நாட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த லக்மால் குரே என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -