கணவன் - மனைவி : சேர்ந்து குளிப்பது சுன்னத்

அபூ ஆஷ்

சேர்ந்து குளிக்கும் பழக்கமுடைய தம்பதியரை விட்டு "தலாக்" தலை தெறிக்க ஓடும் கணவன் மனைவியர் சேர்ந்து குளிப்பது அவர்கள் ஒற்றுமையுடன் வாழ உதவும் என்று தெரிய வந்துள்ளது.

இதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் பே நடைமுறைப்படுத்திச் சென்று விட்டனர். வியர்வை நாற்றத்தின் காரணமாக மலேசியாவில் இளம் தம்பதிகளுக்கிடையேயான விவாகரத்து அதிகரித்துள்ளது. 

மலேசியாவில் சமீபகாலமாக விவாகரத்து அதிகரித்துள்ளது. பத்து திருமணம் நடந்தால் அவற்றில் மூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. குறிப்பாக, 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.

முடைநாற்றம் வீசும் துணிகளை அணியாமல் துவைத்த துணிகளை அணிந்து தங்கள் துணைவருடன் பழகும் படியும், தம்பதியர் சேர்ந்து குளிக்கும் படியும் முகமது ரம்லி அறிவுறுத்தியுள்ளார். "கேலந்தன் மாகாணத்தில் உள்ள வயதான ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களிடம் விசாரித்த போது அவர்கள் பேரன் பேத்தி பிறந்த பின்பும் சேர்ந்து குளிப்பதாக கூறுகின்றனர். 

அவர்களின் ஒற்றுமையின் ரகசியத்தை அப்போது புரிந்து கொண்டேன்' என்கிறார், முகமது ரம்லி. (தினமலர், நவம்பர் 15/2009) இஸ்லாம் கூறுவது : (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம்.

அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் போட்டியிட்டுச்
செல்லும். (நூல் புகாரி 261) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். 

நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீர் அள்ளுவோம். (நூல் புகாரி 273) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது : பெருந்துடக்குடனிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நானும் ஒரே பாத்திரத்திலிருந்து (ஒருமித்து நீரள்ளிக்) குளிப்போம். (நூல் புகாரி 299) சேர்ந்து குளிக்கும் பழக்கமுடைய தம்பதியரை விட்டு "தலாக்" தலை தெறிக்க ஓடாதா என்ன...?! எனவே கணவனும் மனைவியும் சேர்ந்து குளியுங்கள், இல்லறம் நல்லறமாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -