முஹம்மட் ஜெலீல்-
நிந்தவூரில் அண்மையில் புதிதாக புணரமைக்கப்பட்ட கொங்ரீட் வீதிகளினால் வாகனங்களில் செல்வது மிகவும் ஆபத்தான நிலையை எதிர் நோக்கவேண்டியுள்ளது.
அதாவது அவ்வீதியின் நடுவே வீதிக்கு கீழ் செல்லும் தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபையினால் இடப்பட்ட குடிநீர் குழாய்களின் “ஆள்புலமும்’ (Man hole) ஆனது புணரமைக்கப்பட்ட கொங்ரீட் வீதியிலிருந்து சுமார் ஒரு அடி” உயர்வாகயிருப்பதனால் இவ்வீதினுடாக மோட்டார் சைக்கிள், வாகண போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாகவேயுள்ளது இதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இவ்வீதியினுடாக செல்வதென்பது பெரும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த நீர் குழாய்களின் “ஆள்புலங்கள் (Man hole) அமைந்துள்ளது இதுவொரு “ஆள்புலம் என்பதைவிட இதுவொரு மரணப் புலமென்றே சொல்லலாம்.
உண்மையில் இவ்வீதிகள் புணரமைப்பதற்கு முன்கூட்டியே சரியான வீதியமைப்பு திட்டமிடலின்றியே புணரமைக்கப்பட்டிருப்பததென்பது இவ்வீதியினூடாக செல்லும்போதே தெட்டத் தெளிவாக விளங்குகின்றது.
வீதிகள் புணரமைக்கப்படுவதென்பது எப்போதும் மக்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறும் நீர் தேக்கங்கள் இல்லாதவாறே வீதிகள் புணரமைக்கப்பட வேண்டும். அதுதவிர ஏதோ புகழுக்கு வீதியை புணரமைக்கின்றோம் ஊரை அபிவிருத்தியடையச் செய்கின்றோமென்று புகழ் பாடுவதற்கல்ல.
மேலும் இவ்வீதில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவுள்ள ஆள்புலங்கள் (Man hole) தொடர்பாக குடி நீர் விநியோக வடிகாலமைப்பு சபையிடம் கேட்டபோது. இவ்வீதிகள் புணரமைப்பதற்கு முன்னரே தாம் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு இவ்வீதிளிலுள்ள “ஆள்புலங்களை (Man hole) சரிசெய்து வீதியின் மட்டத்திற்கு சமமாக அமைப்பதற்கு தேசிய குடி நீர் விநியோக வடிகாலமைப்பு சபையினால் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதோடு அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதற்குரிய ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்திருந்தால் ஏன் இதுவரைகாலமும் இவ்வீதியிலுள்ள ஆள்புலங்கள் (Man hole) சரி செய்யப்படவில்லையென்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுவொரு நியாயமான கேள்வியெனும் பட்ச்சத்தில் இதற்கு பதிலாக இவ்வீதியிலுள்ள ஆள்புலங்களை சரிசெய்து இவ்வீதியை மக்கள் போக்குவரத்துக்கு இலகுபடுத்தித் தருமாறு சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.



