எனது மகனின் புகழை கெடுக்க பாடலை திருடி வார்த்தைகளை மாற்றி வெளியிட்டுள்ளனர் - டி.ராஜேந்தர்

ர்ச்சைக்குரிய ‘பீப்’ பாடலை வெளியிட்டது சம்பந்தமாக நடிகர் சிம்பு மீது எதிர்ப்புகள் வலுத்துள்ளது. இந்த பாடலில் சம்பந்தப்பட்டதாக சிம்பு மீதும், அனிருத் மீதும் போலீசில் புகார்கள் எழுந்துள்ளது. 

இந்நிலையில், இப்பாடலை உருவாக்கியதாக சிம்பு தரப்பில் இருந்து உறுதிபட கூறிவிட்டாலும், அனிருத் தரப்பில் இருந்து இந்த பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சர்ச்சை பாடல் குறித்து நடிகரும், இயக்குனரும், சிம்புவின் அப்பாவுமான டி.ராஜேந்தர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதில், எனது மகனின் புகழை கெடுக்கும் வகையில் யாரோ இந்த பாடலை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த பாடலை சிம்பு திரைப்படத்திலோ அல்லது வேறு எதிலுமோ பயன்படுத்தவில்லை. யாருக்கும் கொடுக்கவில்லை. 

ஆனால் விஷமிகள் யாரோ இந்த பாடலை திருடி வார்த்தைகளை மாற்றி வெளியிட்டுள்ளனர். அதில் எனது மகனின் பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -