திருகோணமலை கந்தளாய் குளத்தின் பத்து வான் கதாவுகளும் திறந்து வைப்பு..!

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதனால் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக கந்தளாய் குளத்தின் பத்து வான் கதவுகளும் அரையடிக்கு சனிக்கிழமை (12)மாலையில் திறந்துவிடப்பட்டுள்ளதாக கந்தளாய் குளத்தின் நீர்ப்பாசனத் பொறியியலாளர் டபிள்யூ.எல்.விபுல புத்திக்க தெரிவித்தார்.

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் ஒரு இலட்டத்துக்கும் அதிக கன மீற்றரில் காணப்படுவதாகவும் பொறியியலாளர் தெரிவித்தார்.

அத்துடன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்மெடியாவகுளம் மற்றும் இந்திக்குளம் ஆகியவற்றின் வான்கதவுகளும் கடந்த வியாழக்கிழமை திறந்துவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

மழை தொடர்ச்சியாக பெய்து வருவதினால் நெல்வயல்கள் நீரில் மூழ்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -