மூதூரில் பஸ்ஸை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு விளக்கமறியல்..!

எப்.முபாரக்-
மூதூரிலிருந்து கொழும்புக்கு செல்லும் மூதூர் சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சேருநுவர மதுபானசாலை உரிமையாளரையும் அவரது சகாக்கள் இருவரையும் திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் புதன்கிழமை (16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சேருநுவர மதுபானசாலைக்கு முன்னால் வைத்து கல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சேருநுவர மதுபானசாலை உரிமையாளருக்கு கொழும்புக்குச் செல்கின்ற றூட் பஸ் வண்டி ஒன்று காணப்படுகின்றது.

இதனால்,பயணிகளை ஏற்றி இறக்குவதில் மூதூர் சாலை சாரதிகளுக்கும் இவரது பஸ் சாரிகளுக்கும் இருந்து வந்த கருத்து முரண்பாடே இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -