அபுஅலா -
இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசின் உதவியுடன் ரூபா 3 கோடி நிதியின் மூலம் இவ்வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர் இன்று (14) தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வைத்தியசாலையில் நோயார்கள் தங்கி சிகிச்சை பெறுதற்கான போதியளவு வசதிகள் இல்லாமல் பாரிய அசௌகரியங்களை கடந்த காலங்களாக எதிர்கொண்டு வருகின்றனர். இதனை போக்கும் வகையில் 3 கோடி ரூபா நிதியின் மூலம் 50 பேர் தங்கி சிகிச்சை பெறுவதற்கான சகல வசதிகளுடனான ஆண், பெண் விடுதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைவாக, மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொறியிலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை (14) வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறிப்பிட்ட விடுதிகளை அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரின் இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

