காரமுனையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ..!

ஜுனைட் நளீமி,ந.குகதர்சன் -
மியாங்குளம் காரமுனை வீதியருகில் குப்பை கொட்டுவதினை எதிர்த்து இன்று கிராம வாசிகளும் விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த விதியினால் காரமுனை, முள்ளிச்சேனை, வெள்ளாமச்சேனை, கிரிமிச்சை, ஓமன்யாமடு வரையான கிராம வாசிகளும், விவசாயிகளும் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த வீதியின் இருமருங்கிலும் வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபை என்பன தமது தின்மக்களிவுகளை கொட்டி வருவதனால் இவற்றினை உண்பதற்காக காட்டுயானைகள் வீதிக்கு வருகின்றதுடன் போக்குவரத்தில் ஈடுபடுபவர்களை தாக்கியும் வீடுகளுக்கும் பயிர்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது. 

அண்மையில் காட்டு யானையின் தாக்குதலினால் காரமுனை கிராம வாசி ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய அச்சுறுத்தலினால் சுமார் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களை கைவிட வேண்டிய நிலையம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் வழங்கிய போதும் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பிலான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இப்பகுதி மக்கள் மேற்கொண்டிருந்தனர். இதன் போது மாவட்ட செயளாலர், வாகரை பிரதேச செயலாளர், வாழைச்சேனை பிரதேச சபை செயளாலர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு மகஜரும் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதேச சபை செயலாளர் குறிப்பிட்டார். அத்துடன் குப்பைகளை முறையாக அகற்றுவதற்கான மாற்றுக்காணி குறித்து ஆராய்ந்து உறிய தீர்வினை தர முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -