முஹம்மட் தானீஸ்-
புல்மோட்டை பிரதேசம் முழுவதும் அதிக தொடர் மழையினால் பிரதேசமே வெள்ளாதால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியை கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஆர்.ம்.அன்வர் பிரதேச செயலாளர் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை அரசியல் பிரமுகர்களோடு சென்று பார்வை இட்டதுடனர்.
குறித்த நான்கு வட்டார கிராம சேவகர்கள் பிரதேச சபை செயலாளர் பிரதேச அரசியல் பிரமுகர்கள் புல்மோட்டை போலீஸ் பொறுப்பதிகாரி உட்பட குச்சவெளி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் மழைநீர் தடைபட்ட இடங்கள் அடையாலபடுதப்பட்டு JCB இயந்திரம் மூலம் சரி செய்வதற்கு குறித்த கிராம சேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வேலைகள் ஆரம்பிக்கபட்டன.
இதற்கான கலந்துரையாடல் கூட்டம் நேற்று 14.11.2015 ம் திகதி காலை 10.00 மணியளவில் புல்மோட்டை பொது நூலகத்தில் அவசரமாக கூடியது.







