ஏ.எஸ்.எம்.ஜாவித்-
முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது தடவையாகவும் 2014ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒன்பது ஏ (9A) சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு டிசம்பர் மாத முற்பகுதயில் கொழும்பில் நடாத்துவதற்கு சங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்தவகையில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மதாம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஒன்பது ஏ (9A) சித்தியடைந்து இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லிம் மாணவர்கள் இருப்பின் அவர்கள் எதிர் வரும் நவம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை President, (MEPS)> No: A/110/2/1, Maning Town N.H.S, Colombo-08. எனும் முகவரிக்கு பதவுத்தபாலில் அல்லது நேரடியாகவோ கையளிக்கலாம்.
தாமதமாகும் விண்ணப்பங்கள் இறுதி நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அமைப்பின் தலைவர் எம்.இஸட்.அஹமட் முனவ்வர் தெரிவித்தார்.
தொடர்புகளுக்கு- 0716640028, 0773882917, 0712791016
