மு.இ. உமர் அலி-
கடந்த ஒக்டோபர் மாதம் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பகுதியிலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம் செய்தார். இவ்விஜயத்தின் போது வைத்தியசாலைகளின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதியும் வழங்கினார். அந்த வகையில் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது, கட்டி முடிக்கப்பட்டாத கட்டடம் ஒன்றினை பூர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு வைத்திய அத்தியட்சகர் அவர்களால் பிரதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதி அமைச்சர் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அவர்களை இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு பணித்ததற்கு அமைய ரூபா. 4 ¼ கோடி பணம் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது தமக்குள்ள பௌதீக வழங்களின் குறைகளை சுட்டிக்காட்டிய வைத்தியசாலைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்கள் நிறைவேற்றி வருவது அண்மைக்காலமாக வெளிவரும் ஊர்ஜிதமான செய்திகளின் மூலம் தெளிவாகின்றது.

