வாக்குச் சாவடிக்குள் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்வது தவறு என்றார். சாவடிக்குள் சென்று நடிகை ஒருவர் வாக்-கு சேகரித்ததை தாம் ஆட்சேபித்ததாக தெரிவித்தார். வாக்குச்சாவடிக்குள் இருந்தவரை வெளியே அழைத்து வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு வெளியே தம்மிடம் நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சரத் விளக்கமளித்தார். யாரையும் தாக்கும் எண்ணம் தமக்கு இல்லையென்று சரத்குமார் தெரிவித்தார்.
நடிகர்களான சரத் குமார் -விஷால் இடையே மோதல் விஷால் காயம்
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சிறிது நேர சலசலப்பிற்கு வாக்குப் பதிவு மீண்டும் துவங்கியது. பரபரப்பாக நடைபெற்ற வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத் - விஷால் அணியினரிடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...