கல்முனை கல்வி வலய பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கிடையேயான போட்டி..!

சுலைமான் றாபி-
ல்முனை கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப் படுத்தப்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் நலன் பேணுதல் தொடர்பான போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலைகளின் பெயர் விபரங்கள் நேற்று (04) சாய்ந்தமருது மல்ஹருஸ் சம்ஸ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டுள்ளது. 

கல்முனை கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இப்பரிசளிப்பு நிகழ்வில் கல்முனை கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கு ஞாபகச்சின்னங்களை வழங்கி கௌரவித்தனர். 

அந்த வகையில் கோட்டமட்டம் சார்பாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் விபரங்கள் :

நிந்தவூர் கோட்டம் : 
1. அறபா வித்தியாலயம்
2. அல் மஸ்லம் வித்தியாலயம்
3. அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயம்

காரைதீவு கோட்டம் :
1. சண்முகா வித்தியாலயம்
2. கண்ணகி ஹிந்து வித்தியாலயம்
3. விஷ்ணு வித்தியாலயம்

சாய்ந்தமருது கோட்டம் :
1. அல் ஜலால் வித்தியாலயம்
2. லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம்
3. மல்ஹருஸ் சம்ஸ் மத்திய கல்லூரி

கல்முனை முஸ்லிம் பிரிவு : 
1. அல் அஷ்ஹர் வித்தியாலயம்
2. அல் மிஷ்பாஹ் வித்தியாலயம்
3. அல் மினன் வித்தியாலயம்

கல்முனை தமிழ் பிரிவு : 
1. நாவலர் வித்தியாலயம்
2. ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம்
3. சுவாமி விபுலானந்த வித்தியாலயம்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -