தேசிய சிறுவர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை வங்கியினால் பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (01) இடம்பெற்றது.
வங்கி முகாமையாளர் ஏ.சி.கியாசுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் டபில்யூ.எம்.யூ.அத்தனபொல மற்றும் அல் ஜென்னா பாடசாலை அதிபர் எம்.ஏ.அப்துல் ஹை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் டபில்யூ.எம்.யூ.அத்தனபொல கூறுகையில்,
சிறுவர்கள் எமது நாட்டின் நாளைய தலைவர்கள் அவர்களை நாம் மதித்து நடந்தால் அவர்கள் நாளை மற்றய சமூகத்தினரை மதித்து நடப்பார்கள். அவர்களிடத்தில் இப்போதிருந்தே நல்ல நல்ல நற்பன்புகளை சொல்லிக்கொடுத்து அவர்களின் சிறுவயதில் சேமிப்பு பழக்கத்தையும் ஊக்குவித்து எதிர்காலத்தில் எமது நாட்டில் ஒரு சிறந்த தலைவர்களை உறுவாக்க நாம் முன்நின்று செயற்படவேண்டும் என்றார்.
இந்நிகழ்வின்போது, அல் ஜென்னா மாணவர்களுக்கு உண்டியல் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
றியாஸ் ஆதம்-
சர்வதேச சிறுவர் தினத்தினையொட்டி பாலமுனை உதுமாபுரம் தாறுல் ஹஸனாத் வித்தியாலயத்தில் (01.10.2015) இன்று பல்வேறு சிறுவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதன்போது சிறுவர்கள் ஊர்வலமாக செல்வதனையும் பாடசாலை அதிபர் எம்.வை.ஏ மஜீட் மற்றும் ஆசிரியர்கள் நிற்பதனையும் படத்தில் காணலாம்.
எஸ்.எம்.அறூஸ்-
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அட்டாளைச்சுசேனை நிலாமியா கனிஸ்ட பாடசாலை ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலம் பாடசாலை அதிபர் எம்.எப்.எம்.நழீம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (2015-10-01) நடைபெற்றது.
பாடசாலை முன்றலில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியுடாக சென்று அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையை சென்றடைந்து. மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. மாணவர்கள் பல்வேறு பட்ட சிறுவர் உரிமைகளை வெளிக்காட்டும் சுலோகங்களை ஏந்தியவாறு அணிவகுத்துச் சென்றனர்.
றியாஸ் ஆதம்-
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுள் கோலாகலமாக (01.10.2015) இன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஏ அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள் பதாதைகளுடன் ஊர்வலமாக செல்வதனையும், சிறுவர் விளையாட்டுக்கள் நடைபெறுவதனையும் படத்தில் காணலாம்.
எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
தைக்கா நகர் அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலத்தில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்கள் சிறுவர் உரிமைகள் மற்றும் வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் பலூன்களையும் ஏந்தியவாறு வீதிகளில் வளம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
பி. முஹாஜிரீன்-
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் உலக சிறுவர் தினத்தையொடடி இன்று (01) வியாழக்கிழமை சிறுவர் தின வைபவங்கள் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் பதாதைகளும் கொடிகளும் ஏந்தியவாறு வீதி விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களது விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. சிறுவர்களுக்கான பலூன் உடைத்தல், சாக்கோட்டம், பந்து எறிதல், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல், சமநிலை ஓட்டம், போத்தலில் மண் நிரப்புதல், குறி பார்த்தெறிதல் போன்ற விநோத வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்களும்; மாணவர்களும் கலந்து கொண்டனர்.



















