மஹ்மூத் மகளிர் கல்லூரி வீதியின் குறுக்கு வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் - ஆரிப் சம்சுடீன்

ஊடகப் பிரிவு-

30 வருடகாலமாக அபிவிருத்தி செய்யப்படாதிருந்த மஹ்மூத் மகளிர் கல்லூரி வீதியின் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணை;ககளத்தினால் ஒக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாணவர்களுக்கும் அசிரியர்களுக்கும் பாதசாரிகளுக்கும் இடைஞ்சலாக குன்றும் குழியும்நிறைந்து குறிப்பிட்ட வீதி காணப்பட்டபோதிலும் அதிகாரத்திலிருந்த எவரும் இவ்வீதியினை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் குறித்த வீதி அபிவிருத்தி தொடர்பில் பாதசாரிகளும் ஆசிரியர்களும்; மாணவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்களின் வேண்டுகோளின் பெயரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலாபதி அவர்களின் பணிப்புரைக்கமைய இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

230 மீற்றர் நீளம் கொண்ட இவ்வீதியின் அபிவிருத்திப்பணிகளை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய அலுவலகம் முன்னெடுக்கவுள்ளது. கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் றியாஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறவுள்ளதுடன் இவ் வீதி அபிவிருத்திப் பணிக்காக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக நீண்ட காலமாக இப்பிராந்தியத்தில் நிலவிய வீதி அபிவிருத்திக் குறைபாடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்களின் நடவடிக்கையின் மூலம் தீர்க்கப்படவுள்ளமை குறிபப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -