பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை 'மிமா' சமூக சேவை அமைப்பின் 10வது ஆண்டு நிறைவையொட்டி விஷேட இப்தார் நிகழ்வும்,மார்கச் சொற்பொழிவும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை(10-07-2015)அல்-மதீனா வித்தியாலயத்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
'மிமா' சமூக சேவை அமைப்பின் தலைவர் என்.எம்.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள்,கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்,கழகங்களின் பிரதிநிதிகள், சமூக சேவையாளர்கள், ஊர்பிரமுகர்கள் உள்ளீட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளதாக அமைப்பின் செயலாளர் யு.எஸ்.சஜீத் தெரிவித்தார்.

