அன்புள்ள வாப்பாவுக்கு (தந்தைக்கு ஒரு கடிதம்) fathers day today

ன்புள்ள வாப்பாவுக்கு ,
ஆச்சரியமாய் பார்க்காதே என் வாப்பா
உண்மையாக நான் உனக்கு எழுதிய கடிதம் தான்....

தொலைபேசியில் அம்மாவிடம் மட்டும்
ஆசைதீர பேசுபவன்
உன்னிடம் பேசியதில்லை
உன்னை விசாரித்ததும் இல்லை
உன் மனதிலுள்ள இந்த கவலைகள் புரியாமலில்லை எனக்கு....

எப்போது என்னைக்கண்டாலும் உர்ர் என்று மாறும்
உனது கோபப் பார்வை ,
இப்போதும் என் கண்முன்னே வந்து
கலங்க வைக்கிறது வாப்பா.....

அது உண்மை கோபம் அல்லவே
பொய் கோபம் தான் என உணராத மடையனானேன் நான்.
உணர்ந்தபடியால் தான் இந்த கடிதம் உனக்கு வாப்பா.....

எல்லா குழந்தையின் சிறுவயது கதாநாயகன்
தன தந்தையே...
எனக்கும் நீதான் அந்த கதாநாயகனே வாப்பா....

அம்மா சிறுவயதில் என்னிடம் அடிக்கடி கூறும் வார்த்தைகள்,,,,
நீ என்னை தோளில் தூக்கி கடைக்கு செல்ல
`அப்பா டேய் மிட்டைவாங்கிதாடா ` என நான்
அதிகாரமாய் பேசுவதை கேட்கவே
ஆவலில் துடிப்பாயாம் வாப்பா....

மிதிவண்டி கற்றுத்தந்தது முதல் கிரிகெட் மட்டை, துப்பாக்கி,கால்பந்தாட்டம் வரையிலும் நான் நினைக்கும் முன்னரே என் கையில் தந்தவர்
என் வாப்பா...

ஆனால் நான் விரும்பிய கல்வியை மட்டும் எனக்கு அளிக்கவில்லை
காரணம் நீ அல்ல எனகு வந்த விதி வாப்பா..

எங்கு சென்றாலும் உன் கைப்பிடித்து நடக்கவே விரும்புபவன் நான் நமக்குள் இந்த இடைவெளி வந்தது எப்படி வாப்பா...

அதையும் நான் கூறுவேன் அமைதியாக கேள் வாப்பா,,,,

காக்காவின் ஒவ்வொரு வெற்றிகள் வந்ததும்
தனிமயாக்கப்பட்டதாய் உணர்ந்தேன்
நான் கேட்ட பொருள் அவனுக்கு கிட்டியதால்
கடும் கோபம் அடைந்தேன்
உன் தோளில் எனக்கிருந்த இடம் அவனதானதால்
பெரும் வெறுப்பு கொண்டேன் .....
அந்த புரியாத வயதில் இதை எல்லாம் தெரியாதது என் தவறா வாப்பா.....

இன்று வரை நீ என்னை அடித்ததில்லை
அடித்திருந்தால் கூட நான் மறந்திருப்பேன்
நீ திட்டிய வார்த்தைகள் இன்றும் மறப்பதில்லை வாப்பா.....

வாலிபப்பருவம் நான் வரவர நமக்குள்
இடைவெளிப் பருவமும் அதிகமாய் வந்த
காரணமென்ன வாப்பா....

தவறுகளை நான்
செய்ததாய் நீ திட்டியதால்
செய்யாத அந்த தவறுகளை
செய்தால் என்ன என்று என் மனது
செய்யத்தூண்டியது இயல்புதானே வாப்பா...

யார் என்னைப்பற்றி என்னகூறினாலும்
அதை முழுதாய் நம்பிய நீ
நான் சொல்வதை மட்டும் நம்பாமல் போனது
என் குற்றமா என் வயதின் குற்றமா
அதன் பதிலை உன்னிடமே விட்டுவிட்டேன்
வாப்பா...

நான் பொய் சொன்னாலும் நம்பும் அம்மா
உண்மையை சொன்னாலும் நம்பாத நீ
என்னைப்பற்றி எப்பொழுதும் உன்னிடம்
குறைகூறும் காக்கா அனால் அவனிடம் நான் காட்டும் பாசம் உண்மை யாரை நம்புவேன்
நீயே கூறிவிடு வாப்பா...

எனக்கு கிட்டாத கல்லூரி வாழ்வு
காக்காவுக்கு கிட்டியதால் மகிழ்ந்தேனே ஒழிய
பொறமை என்பது என் மனதளவிலும் இல்லை
இருந்தும் அவன் தவறு செய்தால் நீ
மேற்கோள் காட்டுவது என்னைத்தானே
அது மட்டும் ஏன் வாப்பா...

குழந்தை பருவத்தில் கதாநாயகனாய்
தெரிந்த நீ
வாலிபத்தில் எனக்கு பகைவன் போல் தோன்றினாய்
என்று அதை நான் எண்ணிப்பார்க்கையில்
என்மீது எனக்கு ஏளனம் தான் வருகிறது வாப்பா...

அன்று நீ என்னை அன்பாய் அழைத்து பேசியிருந்தால் போதும்
உன் மகன் உத்தமன் என்று உன் உள்ளம் கூறியிருக்கும் வாப்பா....

இன்று நான் ஒவ்வொன்றாய் எண்ணிப்பார்க்கிறேன்
உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லாமல் போனது ஒருவகையில் நியாயம் தான் வாப்பா ..

உன் ஒவ்வொரு பேச்சிற்க்கும் நான் எதிர் பேச்சு பேசியது நம் மகன் பாதை தவறுகிறானோ
என நீ என்னும் வகையில் நான் பேசியதும் தவறுதானே ,,,
ஒரு தகப்பனாக பிள்ளையை ஒழுக்கமாய்
வளர்க்கவேண்டும் என எண்ணித்தான் நீ பேசினாய் என்பதை அப்பொழுது என் மனம் எண்ணவில்லையே வாப்பா...

அன்று நீ கூறியதை அன்பாய் கூறியிருந்தால் போதுமே ....
இனிமேல் உன்னுடன் உனக்கு நல்ல மகனாய் நான் வாழவேண்டும் .
உன்னோடு ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் என் வாழ்க்கை அமையவேண்டும் .

நான் எழுதியதில் ஏதேனும் உன் மனதை
புண்படுத்தியிருப்பின் எனக்காக
அதை நீ மறந்து மன்னித்து விடு வாப்பா ...

இது உனக்காக மட்டும் எழுதிய கடிதம்
உடல்நிலையை பத்திரமாக பார்த்துக்கொள்...

இப்படிக்கு
உன் அன்பு மகன் ஆசை மைந்தன் முஹம்மது சப்றீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -