ரணில் விக்ரமசிங்க என்ற கொலைகாரன் படலந்த என்ற சித்திரவதை கூடத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களை கொலை செய்ததாக முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் அடக்குமுறையை ஒழிக்க பவித்ரா வன்னியாராச்சிகள் உயிரை பணயம் வைத்து செயற்பாடுகள் எனவும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து மூடி முறைத்தனர். தேர்தலை ஒத்திப் போடும் வழமையான வேலைத்திட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி தற்போதைய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதுடன் அண்மையில் அதனை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

