இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி, அணித்தலைவர் டோனியுடன் கார் பந்தயத்தில் மோதிய சுவாரஸ்யமான தகவலை பற்றி கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை டெல்லியில் ஆடிக் கார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோஹ்லி நிரூபர்களிடம் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சுவையான சம்பவம் பற்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் நடக்கப் போகும் போட்டிக்காக நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.
அந்த சமயம் மைக்கேல் ஜாக்சனின் ஆவணப்படத்தை பார்க்க முடிவு செய்திருந்தோம். இந்நிலையில் எனக்கும் டோனிக்கும் இடையே யார் முதலில் திரையரங்கிற்கு செல்வது என்று ஒரு போட்டி வைத்தோம்.
அது ஒரு நடுஇரவு. டோனியும் ரெய்னாவும் ஒரு காரில் இருந்தனர். நான் ஒரு காரில் இருந்தேன். அங்குள்ள தெருவில் பறந்தோம். நான் தான் முதலில் திரையரங்கிற்கு சென்றேன் என்று கூறியுள்ளார்.