சாய்ந்தமருதில் IT,ஆங்கில மொழி போன்ற பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

எம்.ஐ.சம்சுதீன்,எம்.வை.அமீர்-
டந்த 2013 மற்றும் 2014 ஆண்டுகளில் கல்விப்பொதுதராதர சாதாரணதரம் எழுதிய மாணவர்களுக்கு, சாய்ந்தமருது நனசல, எஸ்.ஐ.ரீ. கெம்பஸ் இணைந்து வழங்கிய புலமைப்பரிசில் ஊடாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழி பயிற்சி போன்ற நான்குமாத பயிற்சிநெறிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2015-05-17 ல் சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

எஸ்.ஐ.ரீ. கெம்பஸின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அசீஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழவில் கல்முனை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து பயிற்சிநெறிகளை முடித்த மாணவர்களுக்கு சான்றிதல்களை வழங்கி வைத்தார். 

அதிதிகள் வரிசையில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.இல்லியாஸ், சாய்ந்தமருது நனசலவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எச்.இம்தியாஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் எம்.வி.எம்.அமான் ஆகியோரும் கலந்து மாணவர்களுக்கு சான்றிதல்களை வழங்கி வைத்தனர்.

பயிற்சிநெறிகளை முடித்த மாணவர்களும் அவர்களது பெற்றோரும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -