இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல் நூல் வெளியீட்டு விழா!

அபு அலா,சன்சீர் –
றக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் வெளியீட்டில் லரீப் சுலைமான் எழுதிய "இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல்" நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை மாலை (02) இறக்காமம் பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பிரதம நம்பிக்கையாளர் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் மௌலவி ஏ.கே.அப்துல் றவூப் தலைமையில் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றஊப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

மேலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவி, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் சிரேஷ்ட சட்டத்தணி எஸ்.எம்.ஏ.கபூர், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்கள், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா மற்றும் எழுத்தாளர்கள் கல்விமான்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

"இறக்காமம் வரலாறு சமூகம் வாழ்வியல்" நூலின் முதல் பிரதியினை நூலசிரியர் லரீப் சுலைமான் பிரதம அதிதியிடம் வழங்கி வைத்தார். 

இரண்டாம், மூன்றாம் பிரதிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் ஆகியோருக்கும் நான்காம் பிரதியினை இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் யூ.கே.ஜபீர் மௌலவிக்கும் பிரதம அதிதியினால் பெற்றுக்கொண்டனர். ஏனைய பிரதிகளை இந்த நிகழ்வின் பிரதம அதிதி மற்றும் கௌரவ, விசேஷட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -