தீவுத்திடல் ஆலயத்தில் மக்கள் சந்திப்பு - கி.துரைராஜ சிங்கம்

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு கொம்மாதுறை தீவுத் திடல் பகுதிக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜ சிங்கம் சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரின் தலைமையில் தீவுத்திடல் ஆலயத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு இதன்போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச வாழ் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் அமைச்சருக்கு தெரியப்படுத்தியதுடன், பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையான மின்சாரப் பிரச்சினை தொடர்பில் மக்களால் அதிகம் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் இது தொடர்பில் அவ்விடத்திலேயே மின்சார சபை அலுவலகருடன் தொடர்பு கொண்டு அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் அதனை பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அத்தோடு கொம்மாதுறை தீவுத்திடல் செல்லும் வழியில் பழுதடைந்த நிலையிலுள்ள மதகு மற்றும் வீதிகள் என்பவற்றை பார்வையிட்டதுடன், வீதிகளுக்கு விரைவில் கிரவல் மூலம் செப்பனிட்டு தருவதாக மக்களிடம் தெரிவித்தார்.றி






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -