அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு!

றியாஸ் ஆதம்-
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனத்தினூடாக அம்பாரை மாவட்டமெங்கும் தையல் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டடு வருகிறது. 

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வு (2015.05.02) சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவரும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளருமான எம்.ஏ.சீ நஜீப் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் கௌரவ அதிதியாகவும் விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம் முபீத் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் அன்வர் முஸ்தபா, மருதமுனை, நாவிதன்வெளி அமைப்பாளர் சித்தீக் நதீர் ஆகியோருடன் பல அதிதிகளும் கலந்துகொண்டனர்.(ந)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -