வெசாக் தினத்தினை முன்னிட்டு கல்குடா பொலிசார் மற்றும் சிவில் ஏற்பாடு செய்த நிகழ்வு!

நா.நவோஜ்-

வெசாக் தினத்தினை முன்னிட்டு கல்குடா பொலிசார் மற்றும் சிவில் அமைப்புக்கள் இனைந்து ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் பௌத்த குருமாரின் பிரித் ஓதுதல் நிகழ்வும் இந்துக் குருக்களின் வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்றது.

வறிய நிலையில் வாழும் குடுப்பத்தினருக்கான பாடசாலை உபகரணங்கள் உலர் உணவுப் பொதிகள் மற்றும் குடி தண்ணீர் போத்தல்கள் போன்றவை வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பொதுமக்களுக்கு தானங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரெட்ன தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க மற்றும் ஏறாவூர் பிரதேச பொலிஸ்அத்தியட்சகர் எகலவெல மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இவ் வெசாக் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -