இந்திய - இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை அமைச்சரின் கருத்து அதற்கு உதவிகரமாக இருக்காது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க ஆண்டுக்கு 65 நாட்களுக்கு மட்டும் இலங்கை கடற்பரப்பில், இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த பரிந்துரையை நிராகரித்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, 65 மணி நேரம் கூட இந்திய மீனவர்களை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கை மீனவர்கள் விவகாரத்திலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், இலங்கை அரசுடன் இணைந்து ஏற்கத்தக்க முடிவை மேற்கொள்ள இந்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.(ந)
