மஹிந்தைக்கு முஸ்­லிம்­கள் மீது திடீ­ர் ஞானம் பிறந்­த­மைக்கு காரணம் என்ன?முஜிபுர் ரஹ்மான்

முஸ்லிம் சமூ­கத்­திற்கு அநி­யா­ய­மி­ழைக்­கப்­பட்­ட­போது சட்­டத்தை அமுல்­ப­டுத்­தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனா­தி­பதி இன்று முஸ்­லிம்­க­ளுடன் சந்­திப்­பு­களை ஏற்­பா­டு ­செய்­வ­தா­னது மிகப்­பெ­ரிய நகைச்­சு­வை­யாக இருக்கிறது என மேல் மாகாண சபை உறுப்­பி­னரும் மத்­திய கொழும்பு ஐக்­கிய தேசிய கட்­சியின் பிர­தான அமைப்­பா­ள­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இதே­வேளை, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரா­ஜ­கங்கள் கட்­ட­வி­ழ்க்கப்­பட்­டி­ருந்த­ போது, முஸ்­லிம்­ மக்கள் பிர­தி­நி­திகள் முன்னாள் ஜனா­தி­ப­தியை சந்­திக்க நேரம் கேட்­ட­போது இதனை தவிர்த்­து­ வந்த அவர் இன்று முஸ்­லிம்­களை சந்திக்கத் திடீ­ரென ஞானம் பிறந்­த­மைக்கு காரணம் என்ன? என்றும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்­பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், இலங்கை வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளுக்கு அதிக அநி­யாயம் இழைக்­கப்­பட்­டது ஒல்­லாந்தர் காலத்­தி­லாகும். அவர்கள் நாட்டைக் கைப்­ப­ற்றி­ய­போது கொழும்­பி­லுள்ள முஸ்­லிம்­களை விரட்­டினர். அத்­துடன் வர்த்­த­கத்தை சீர்­கு­லைத்­தனர். இப்­படி பல அட்­டூ­ழியங்கள் அரங்­கேற்­றப்­பட்­டன. 

இந்த இருண்ட யுகத்­திற்குப் பின்னர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அதி­க­மான அட்­டூ­ழியங்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக ஏவி விடப்­பட்டன. இந்தத் தீய சக்­தி­க­ளுக்கு பின்னால் அப்­போ­தைய அர­சாங்கம் இருந்­த­மையே மிகவும் வருந்­தத்­தக்க விட­ய­மாக இருந்­தது முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார். 

குறிப்­பாக 30 இற்கும் மேற்­பட்ட பள்­ளி­வா­சல்கள் மற்றும் குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளுக்கு எதி­ராக பௌத்த பேரி­ன­வா­திகள் போர்க்­கொடி தூக்­கினர். முக்­கி­ய­மாக தம்­புள்ளை, கிராண்பாஸ், ஜெய்­லானி பள்­ளி­வா­சல்­களில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அத்­துடன் முக்­கிய வர்த்­தக நிலை­யங்கள் உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளிலும் முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றுக்கும் மேலாக அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை, துந்­துவ மற்றும் வெலிப்­பனை பகு­தி­களில் இன வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­ விடப்­பட்டு முஸ்­லிம்­களை அச்­ச­ம­டையச் செய்­தனர். 

இவ்­வாறு பல அரா­ஜ­கங்­களை பொது பல சேனா, சிங்­கள ராவய, ராவணா பலய உள்­ளிட்ட பௌத்த பேரி­ன­வாத அமைப்­புகள் முன்­னெ­டுத்­த­போது நாட்டின் சாதா­ரண சட்­டங்­களை கூட அமுல்­ப­டுத்­தாது முன்னாள் ஜனா­தி­பதி மௌனம் காத்தார் 'இவரின் இந்த அரா­ஜ­கங்­க­ளுக்கு சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றி­ணைந்து கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி முடி­வு­கட்­டினர். இந்­நி­லையில் மீண்டும் அர­சி­ய­லுக்கு பிர­வே­சிக்க அவர் முயற்சி செய்து வரு­கிறார். ஆனாலும் அவர் செய்த ஊழல் மோச­டி­களும் இன­வாத செயற்­பா­டு­களும் அவரின் அர­சியல் மீள் வரு­கைக்கு தடை­யாக இருக்­கின்­றன. 

இந்­நி­லையில் அவ­ரு­டைய காலத்தில் பல சலு­கை­களை அனு­ப­வித்து வந்த சில முஸ்­லிம்கள் இன்றும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பின்னால் இருந்து செயற்­ப­டு­கின்­றனர். இது முஸ்லிம் சமூ­கத்தை சந்­திக்கும் நிகழ்­வல்ல. மஹிந்­தவின் காலத்தில் சலு­கை­களை அனு­ப­வித்­த­வர்­களின் சதித்­திட்ட ஒன்­று­கூ­ட­லாகும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, நிகழ்வு முடிந்­த­வுடன் மஹிந்த முஸ்­லிம்­களை நேசிப்­பவர். கடந்த கால சம்­ப­வங்­க­ளுக்கும் அவ­ருக்கும் எவ்­வி­தமான தொடர்­பு­மில்லை. மேற்­கத்­தி­ய­வா­தி­களின் சதித்­திட்டம் என்று அறி­விப்­பார்கள் எனவும் எதிர்வு கூறினார் முஜிபுர் ரஹ்மான்.

இந்த சந்­திப்­பா­னது முஸ்­லிம்­களை ஏமாற்­று­வ­தற்கு நகைச்சுவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வாகும். இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து பல பாடங்களை படித்து விட்டனர். அவரின் மீள்வருகை முஸ்லிம் சமூகத்திற்கே பேராபத்தாகும் என்பதை மிகத்தெளிவாக புரிந்துவைத்துள்ளனர். அவரின் மீள்வருகையை தோற்கடிக்க எமது சமூகம் பின்நிற்கப்போவதில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -