பம்பலப்பிட்டிய புனித பீட்டர் கல்லூரியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பாடசாலையின் காவலாளியும் , அப்பெண்ணை சந்திக்க வந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பீட்டர் கல்லூரியின் களஞ்சிய அறையொன்றிலிருந்து அங்கு பணியாற்றும் பெண் சிற்றூழியர் ஒருவரின் சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.
குறித்த பெண் ஊழியர் ஏதேனும் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
44 வயதான குறித்த பணிப்பெண் கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்ததாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த ஊடகவியாலாளர்களுக்கு உற் செல்ல அனுமதி மறுப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
