மட்டக்களப்பு மாவட்டம் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது- பிள்ளையான் MPC கேள்வியும் பதிலும்





ட்சி மாற்றத்திலே மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக காணப்படும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்று சொல்லாம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழக மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வும், சிநேக பூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டி என்பன சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ராஜநாயகம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில்; பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
மட்டக்களப்பு மாவட்டம் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறேன் என்றால் யாழ்ப்பாணத்திலே படையினர் நிலங்களை விடுவிக்கின்றனர். அங்கு அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அங்கு சில வேலைத் திட்டங்களும் இடம் பெறுகின்றது. இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையிலே முதலமைச்சரையும் விட்டுக் கொடுத்து விட்டு மத்திய அரசாங்கத்தில் அமைச்சுக்களும் பெறப்படாமல் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைமைப் பதவியும் கிடைக்கவில்லை இதனால் தான் சொல்கிறேன் நூறு நாள் வேலைத்திட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்று.

ஆட்சி மாற்றத்திலே நிலத்தை மீட்டுத் தருகின்றோம் என்று சொன்னவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஜனாதிபதியினுடைய மாவட்டமான பொலநறுவை மாவட்டத்தில் இருந்து பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேச்சத் தரைகளுக்கான நிலங்களைப் பிடித்து வருகின்றனர்.

அதே போன்று இப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற அரசியல்வாதி ஒருவரும், அவருடைய உறவினர்களும் சொந்தக் காரர்களும் வாகரைப் பகுதியிலே அதிகமான காணிகளை எடுத்து பண்ணைகள் செய்து வருகின்றனர் அதைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு யாரும் தயாரில்லை ஆனால் நாங்கள் செய்யும் வேலைத்திட்டங்களை விமர்சனம் செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் தான் கிழக்கு மாகாணம் விரைவாக கட்டியெழுப்பப்பட்டது. இருந்தாலும் நடந்து முடிந்த தேர்தலிலே அரசின் மாற்றத்தோடு நூறு நாள் வேலைத்திட்டம் என்ற ஒரு வேலைத்திட்டமும் வந்தது அதில் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு எல்லாம் நடந்ததா என்று பார்த்தால் விடை கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

மக்களை காப்பாற்றியவர்கள் யார் மக்களுக்கு அபிவிருத்திகளைச் செய்தவர்கள் யார் என்பதை மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வரப்போகின்ற மாற்றத்திலே எங்களுடைய மக்களுக்கு நாங்கள் எதைச் செய்யப் போகின்றோம் மாற்றத்தில் எங்களுடைய பங்கு என்ன கடந்த காலத் தலைவர்கள் பேசிவிட்டது மாத்திரம் தான் அவர்களை விட அதிகமாக இளைஞர் யுவதிகளை பாதுகாப்பதிலும் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதிலும் நாங்கள் முன்னின்று உழைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது எட்டு ஓவர்களைக் கொண்ட சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சித்தாண்டி மதுரா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி ஒரு விக்கட் இழப்பிற்கு அறுபது ஓட்டங்களைப் பெற்றது. அதனை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய சித்தாண்டி சுடர் ஒளி விளையாட்டுக் கழகம் எட்டு ஓவர் முடிவில் எட்டு விக்கட்டுக்களை இழந்து நாற்பது ஓட்டங்களைப் பெற்று சித்தாண்டி மதுரா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

இம் மைதானம் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் இரண்டு மில்லியன் ரூபா விஷேட நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -