சம்மந்துறை FODE அமைப்பினரின் கல்வி நடவடிக்கைகள்..!

ம்மந்துறையின் பல இளம் வாலிபர்களை கொண்டு பல வருடங்களாக இயங்கி வரும் சமூக சேவை அமைப்பான FODE ( FOrum for DEvelopment ) அமைப்பினர் சம்மந்துறையின் கல்வியில் பாரிய கல்விப்புரட்சியினை உண்டுபண்ணும் நோக்கத்துடன் ஓர் திட்டத்தினை வழிநடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதாவது அண்மையில் சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது யாவரும் அறிந்த விடயமே.  தேசிய பாடசாலையில் வரலாறு காணாதளவு 9A க்களும், 8A க்களும் இம்முறை பெறப்பட்டுள்ளன எனவே சம்மந்துறையின் கல்விமட்டம் பாரிய வளர்ச்சியடைந்துள்ளது என்பதாகும். 

மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செய்திதான் ஆனால் அவர்கள் அதே சம்மாந்துறையில் உள்ள பல பாடசாலைகளின் அடைவு மட்டத்தினை ஆராய மறந்துவிட்டனர்.ஏனென்றால் அவர்களின் கல்விமட்டத்தில் பெரிதும் அக்கரை பலருக்கு இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

இதனை கவனத்திட்கொண்ட இவ்வமைப்பானது தனக்கே உரித்தான ஓர் திட்டத்தினை வழிவகுத்தது.

அதாவது அடைவுமட்டம் பின்தங்கிய (ஒப்பீட்டு ரீதியில்) பாடசாலை ஒன்றில் சுமார் எட்டு தொடக்கம் பத்து வரையான மாத இடைவெளிக்கு தொடர்ந்து மாணவர்களை நெறிப்படுத்தல், கருத்தரங்கு நடாத்தல் மேலும் வாரம் ஒருமுறை அடைவுமட்ட பரீட்சை நடாத்தல் என்பதாகும்.இதற்காக அவர்கள் செலவிட முடிவு செய்த தொகை 50000 ரூபாய் ஆகும்.இதனை எமதூரின் பல புத்திஜீவிகளிடமிருந்தும் தனது சொந்த பணத்திலும் இருந்து பெற முடிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக இவர்கள் சம்மாந்துறை சென்னால் சாஹிரா கல்லூரியை தேர்வுசெய்து கணித பாடத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆகிய நாட்களில் இதற்காக பல்வேறு ஆலோசனை கருத்தரங்குகள் இடம்பெற்று பெற்றோர்களிடம் கருத்துக்களை பெற்றனர்.இதனை பெற்றோர் பெற்றோர் ஆதரித்தது மட்டுமல்லாது எந்த இடர்வந்தாலும் தாம் உதவுவோம் என உருதிகொண்டனர் எனவும் தெருவித்தனர்.


பின்னர் முதற்கட்ட நடவடிக்கையாக தகுதிகான் பரீட்சை இடம்பெற்று மாணவர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற வகையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.


பின்பு கடந்த அன்று சுமார் 6 மணிநேரம் அதாவது தொடக்கம் வரை கருத்தரங்கு நடாத்தப்பட்டது.அதாவது 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற ரீதியில்.

AC.RUfaik Ahamed, MLM.Irfan Mohammed, Basith, Naseer போன்ற O/L கணிதத்துறையில் தேர்ச்சிபெற்ற பல்கலைகழக மாணவர்களினாலேயே இந்த கருத்தரங்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.பின்னர் மாணவர்களுக்கு உடனடி பரீட்சையும் நடாத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
ஆரம்பக்கட்டமான இந்நிகழ்வு மேலும் எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து செயற்படுமென கழகத்தின் தலைவர் H.Ramzee அவர்களும் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்களும் தெருவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -