நடிகர் விக்ராந்தின் ஒன்றுவிட்ட அண்ணன், நடிகர் விஜய் என்பது பெரும்பாலான இரசிகர்களுக்கு தெரியாது. இரண்டு பேரையும் சேர்ந்தார்போல் எப்போதாவது பார்த்தால்தானே?
விஜய்னா யார்னே எனக்கு தெரியாது, விஷால்தான் எனக்கு எல்லாம் என்று விக்ராந்த், பாண்டிய நாடு படத்தின் போது கடுப்படித்ததாக வதந்திகள் வந்தன.
அதை மறுப்பது போல் உள்ளது, விக்ராந்தின் சமீபத்திய பேச்சு.
'நான் விஜய்யின் சகோதரன் என்பதால் சினிமா உலகிற்குள் எளிதாக நுழைந்தேன். அவரது உறவினராக இருப்பதனால்தான் என்னால் பத்து வருடங்களாக நீடிக்க முடிந்திருக்கிறது. விஜய் எனக்கு மிகப்பெரிய வலிமையாகவும் மற்றும் உத்வேகமாகவும் இருக்கிறார். அவர் பெரிய நடிகராக இருந்தபோதும், எப்போதும் அடக்கத்துடனே இருக்கிறார்' என்று பேச்சில் பவ்யம் காட்டியிருக்கிறார், விக்ராந்த்.
சகோதரர்களுக்குள் சமாதானம் ஆகிருச்சோ!!
