ஆணைக்­குழுக்கு வருமாறு மஹிந்த,கோத்தபாயவுக்கு அழைப்பு - கோத்தபாய மறுப்பு

முன்னாள் ஜனா­தி ­பதி மஹிந்த ராஜ பக் ஷவை எதிர்­வரும் 24ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு முன் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­து.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பு விடு­க்­கப்­பட்ட பின்னர் திஸ்ஸ அத்­த­நா­யக்­க­வுக்கு அமைச்சர் பத­வி­யொன்று வழங்­கி­யமை மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் தொடர்­பாக சாட்­சி­யத்தை பெற்­றுக்­கொள்­ளவே இவ்­வ­ழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இதே வேளை முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜபக் ஷவையும் எதிர்­வரும் 23 மற்றும் 27 ஆம் திக­தியும் ஆணைக்­குழு முன் ஆஜ­ரா­கு­மாறும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவன்காட் மற்றும் ரத்ன லங்கா பாது­காப்பு சேவை தொடர்­பாக சாட்­சி­யங்­களை பெற்றுக் கொள்­வ­தற்கே அழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­ய­வ­ரு­கி­றது.

முன்னாள் ஜனா­தி­ப­திக்கும் பாது­காப்புச் செய­லா­ள­ருக்­கு­மான அழைப்­புக்கள் எழுத்து மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதேவேளை, தனது விசாரணை திகதிகளை பிற்போடுமாறும் குறித்த திகதிகளில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தன்னால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாதென்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -