எம்.ஜே.எம். சஜீத்-
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் வருடாந்த பொது கூட்டமும் நிருவாக சபை தெரிவும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான யூ.எல். சபிர் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நல்ல ஆட்சியில் எமது இளைஞர்கள் நல்ல எண்னங்களை எண்ணுவதுடன் அவர்களுக்கான கல்வி, கலாச்சாரம், விளையாட்டு போன்ற துறைகளிலும் அவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை , ஒலுவில், ஆலங்குளம், தீகவாபி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாகவும் மூவின மக்களையும் 44 இளைஞர் கழகங்களையும் பிரதிநிதிதுவப்படுத்துகின்ற சம்மேளனமாகவும் காணப்படுகின்றது.
இதன் போது 2015ம் ஆண்டுக்கான 21 உறுப்பினர்களை கொண்ட நிறுவாக சபை தெரிவும் இடம்பெற்றது. மீண்டும் தலைவராக முன்னால் தலைவர் யூ.எல். சபிர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான யூ.எல். சபிர், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர் யூ.எல்.மஜீட், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.நளிரா, எம்.எம்.நாஸிர் அலி, மற்றும் கழகத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)