திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கங்குவேலி புளியடிசோலை விவசாய சம்மேள கட்டிட திறப்பு விழா வியாழக்கிழமை மாலை விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.செல்வராஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜனார்த்தனன், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.தமிழ்ச்செல்வன், எஸ்.மோகன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூதூர் தொகுதிக் கிளைச் செயலாளர் எஸ்.தர்சன், சேருவில நீர்ப்பாசண திணைக்கள அதிகாரி ஜனாப்.எஸ்.முபீஸ் ஆகியோருடன், சம்மேளனத்தின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், ஊர்ப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது சம்மேளனத்திற்கென புதிதாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடத் தொகுதி அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன், அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றதுடன், தென்னை மர கன்றினை விவசாய அமைச்சர் நாட்டி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற அகத்தியர் ஸ்தாபனம் சிவன் ஆலயத்தினையும் சென்று பார்வையிட்டதுடன், பெரும்பாண்மையின மக்களினால் அத்துமீறி பிடித்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் விவசாயிகளின் படுகாடு விவசாய நிலங்களையும் நேரில் சென்று பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)