பேரின்பராஜா சபேஷ்-
புதிய ஆட்சியில் சிறுபாண்மையினர் தமது அரசியல் நகர்வுகளை தென்னகத்திலே இருக்கின்ற தீவிரவாத சக்திகளுக்கு தீனிபோடாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
ஏதிர்கட்சித் தலைவர் விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற சிங்கள கட்சிகள் எங்களுடைய நியாயங்களை உணர்ந்து பகிரங்கமாக குரல்கொடுக்கக் கூடிய சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுபப்pனர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்;
'தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ளது. இன்று கிடைத்துள்ள பதவிகளினால் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து உங்களுக்கு அபிவிருத்தி யார்லா வாசிப்போம் என்று ஆட்சியாளர்கள் உட்பட எவரும் நினைக்கக் கூடாது. 'மழைக்கால் இருட்டு என்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது' என்பது எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு என்றுமே மறவாத ஒன்றாக ஒரு பாடம். ஏன்னென்றால் இன்று ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமான விடயமாகக் காணப்பட்டாலும் எங்களுடைய இலக்கை நாங்கள் எந்தவிதத்திலும் மாற்றிக்கொள்ள மாட்டோம்.
மத்தியிலே கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கின்ற இலக்கிலேதான் எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக சென்று கொண்டிருப்போம். வேலைத் திட்டத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நூறுநாள் வேலைத் திட்டத்தில் சுயநிர்ணய உரிமை தொடர்பான வேலைத் திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த சந்தப்பத்திலே அதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்ற ரீதியில் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகிறோம்.
அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பது தான் எமது அடித்தளமாக தற்போது காண்படுகிறது. அதன்காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மிகப்பெரும் இடராக இருந்த இராணுவ ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள். அதன் பின்பு மாகாணத்திலே சிவில் நிருவாகம் செயற்படத் தொடங்கியிருக்கிறது.
இராணுவ முகாம்கள் மெல்ல மெல்லமாக நீக்கப்பட்டுக்கொண்டிருகின்றன. மக்கள் குடியிருப்புக்கள் அங்குலம் அங்குலமாக மீட்கப்பட்டுக்கொண்டிருகின்றன அரசியல் தொடர்பான பல்வேறு விடங்கள் மத்தியிலே இருக்கின்ற அரசியல் சபை மூலம் செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருகின்றன. எங்களுடைய தலைவரும் அவருடன் இணைந்து முக்கிய உறுப்பினர்களும் அரசியல் சபையிலே பல்வேற நிகழ்வுகளை நகர்த்திக்கொண்டிருகிறார்கள். ஆட்சி மாற்றம் வந்தவுடன் மிகப்பெரியதொரு அரசியல் மாற்றம் எறபடவேண்டும் என்று நாம் என்ற அவாவில் இருக்கவேண்டிய சந்தர்ப்பம் இருவல்ல.
இந்த சந்தரப்பங்களிலே மிகவும் நிதானமாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டு பேரினவாத சக்திகள் தலையெடுத்து இந்த சுகமான சூழ்நிலையை குழப்பாத வகையில் எமது செயற்பாடுகளை நகர்த்திச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது இருக்கின்றது.
எங்கு மிதவாதத் தன்மை நின்றவிடுகிறதோ அங்கு தீவிரவாதம் தலையெடுக்கக் கூடிய சந்தப்பமும் எங்களுடைய வரலாற்றுக் காலங்களிலெல்லாம் நாங்கள் கண்டிருக்கின்றோம். பல்வேறு சமாதான காலங்கள் எங்களுடைய வரலாற்றிலே வந்திருகின்றன அந்த சமாதான காலங்களிலேயெல்லாம் பல்வேறு காரியங்கள் அவ்வவப் போது சாத்தியமாகியிருக்கின்றன.
ஆனால் தீடிரென சமாதானம் குழம்புவதும் மீண்டும் பேரினவாத சக்தி தலையொங்குவதும் எமது அபிலாசைகள் எல்லாம் மண்மூடிப் போவதும் இலங்கையின் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் முன்பு ஏற்பட்ட சமாதானங்களிலிருந்து மாறுபட்ட சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. தேசிய கீதத்தைக் கூட தமிழிலே பாடுவது கூட சிலருக்குப் பொறுக்கவில்லை.
அதைப்பற்றி வழக்கிடுவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் கல்முனைக்கு வந்த மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரெட்ன அவர்கள் சிங்களத்திலே தேசிய கீதம் பாடப்பட்தைத் தொடர்ந்து உரையாற்றிய போது நான் இந்த செயலுக்காக வருந்துகிறேன் உங்களில் எத்தனை பேருக்கு இந்த சிங்களத்திலான தேசிய கீதம் விளங்கியிருக்கும் தேசிய கீதத்தை தமிழில் பாடியிருந்தால் உங்கள் எல்லோருக்கும் விளங்கியிருக்கும் அல்லவா? எனவே வடக்கு கிழக்கிலே தமிழிலே தேசிய கீதத்தைப் பாடவேண்டும் என்று ஒரு சிங்கள தலைவர் கூறிச் சென்றுள்ளார்.
அவர்களைப் போன்றவர்களை நாங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுடைய கரங்களைப் பலப்படுத்த வேண்டியவர்களாகவிருக்கின்றோம்.
எமது தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவரராக வருவதற்கு குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் சிங்களவர்கள். ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக ஏனைய மலையக கட்சி தலைவர்கள் குரல ;கொடுத்துக் கொண்டிருகிறார்கள்.
ஜேவிபியினரே எங்களுடைய நியாயத்தை உணர்ந்து தங்களுடைய கருத்தை பகிரங்கமாக கூறக்கூடிய நிலமை இன்று தென்னகத்திலே காணப்படுகின்ற விடயத்தை நாம் கவனத்திலே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இருக்கின்ற தீவிரவாத சக்திகளுக்கு தீனிபோடாத விதத்திலே நாங்கள் எங்களுடைய விடயங்களை நகர்த்த வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த நாட்டிலே ஏற்படுகின்ற மாற்றங்கள் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் பாதிக்கும் என்பதனை இதுவரையும் இந்த அரசியல் தலைவர்களும் மக்களும் உணரவில்லை என்றால் அது மகா வெட்கக் கேடாகவிருக்கும்.
இந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமாதான சக்திகள் நாட்டில் பற்றுள்ள சக்திகள் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இங்கு ஏற்படுகின்ற மாற்றங்கள் நாட்டின் எல்லோரையும் பாதிக்கக் கூடியவை என்ற மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும். சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று சிந்திக்க வேண்டிய நிலமை வந்துவிட்டால் அது இந்த நாட்டில் மீண்டும் அரசியல் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வாறு சொல்லுகின்ற பொழுது சிறுபாண்மையினராகிய நாங்கள் இந்த சமாதான காலத்திலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நாங்கள் எங்களுடைய உரிமையை என்றும நினைத்துக்கொண்டிருக்க வேண்டும் ஆட்சி மாற்றங்களில் நாங்கள் மயங்கிவிடக் கூடாது நிதானத்துடன் கையாளவேண்டும். பதவி போன்றவை எங்களுடைய அறிவை மயக்கிவிட்டு உரிமை விடயங்களை கைவிட்டவர்களாக மாறிவிட மாட்டோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அபிவிருத்திக்கு வந்துவிட்டது அபிவிருத்தியை விமர்சித்தவர்கள் அபிவிருத்தி செய்ய வந்துவிட்டார்க்ள என்று சிலர் நினைக்கக் கூடும் ஆனால் நாங்கள் செய்வது சரணாகதி அரசியல் அல்ல நாங்கள் செய்வதுதான் உண்மையிலே இணக்க அரசியல் அவர்கள் தங்களை பேரினவாதத்தோடு கரைத்துக்கொண்டு அரசியல் செய்தார்கள் நாங்கள் எங்களுடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு அரசியல் செய்துகொண்டிருக்கின்றோம்' என்றார்.
.jpg)