திருமுறையும் சைவத்திரு நெறியும் எனும் திருமுறை மாநாடு!

த.நவோஜ்,ந.குகதர்சன்-
ட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் திருமுறையும் சைவத்திரு நெறியும் எனும் திருமுறை மாநாடு எதிர்வரும் 07ம் திகதி செவ்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் செவ்வாய்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறும்.

இவ்மாநாட்டில் அருளுரையினை திருப்பனந்தாள், காசித்திருமடம் இணை அதிபர் தவத்திரு.சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், சொற்பொழிவினை தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழகம் பேராசிரியர் அரங்க இராமலிங்கம், தமிழ்நாடு பேராசிரியர் கி.சிவகுமார், பண்ணிசை, தமிழ்நாடு திருமறைக் கலாநிதி கலைமாமணி திருத்தணி சுவாமிநாதன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

எனவே, திருமுறை மாநாட்டுக்கு இந்துக் குருமார்கள், இந்து ஆலய அறங்காவலர்கள், அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை சாதாரண தர, உயர்தர மாணவர்கள், அறநெறிப் பாடசாலை மேற்பிரிவு மாணவர்கள், இந்து சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏனைய இந்து சமய மக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் சா.மதிசுதன் கேட்டுக் கொள்கின்றார்.

அத்தோடு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தற்போது கொழும்பிலும் திருமுறை மாநாடு நடாத்தப்பட்டது. அதேபோன்று மட்டக்களப்பில் நடாத்த வேண்டுமென்பதற்கிணங்க மட்டக்களப்பிலும் திருமுறை மாநாட்டை நடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -