நிந்தவூரின் முதலாவது தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்களாக இருவர் பதவி உயர்வு!


சுலைமான் றாபி-

ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நிந்தவூரைச் சேர்ந்த சீனிமுஹம்மது நபறுல்லாஹ் மற்றும் ஆதம் அலி இர்ஷாத் முஹம்மட் அலி ஆகிய இருவரும் "தாதிய மேற்பார்வை உத்தியோகத்தர்களாக" கடந்த 20.04.2015ம் திகதி முதல் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதில் சேவை மூப்பு அடிப்படையில் எஸ்.நபருல்லாஹ்வும், போட்டிப் பரீட்சை மூலம் ஏ.ஏ. இர்ஷாத் முஹம்மட் அலியும் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் 25வருட சேவை மூப்பினைக் கொண்ட எஸ்.நபருல்லாஹ் கடந்த 1990ம் ஆண்டு இச் சேவைக்கு உள்வாங்கப்பட்டதோடு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுமார் 13 வருட சேவைமூப்பினையும் கொண்டுள்ளார். 
இதேவேளை 10 வருட சேவை அனுபவத்தினைக் கொண்ட ஏ.ஏ. இர்ஷாத் முஹம்மட் அலி கடந்த 2004ம் ஆண்டு இச் சேவைக்கு உள்வாங்கப்பட்டதோடு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தற்போது கடமைபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -