ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற ஐக்கிய தேசிய கட்சி தேர்தல்களில் எவ்வித முன்னேற்றமும் காணவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் 7 இலட்ச வாக்குகளை பெற்று கொடுத்தோம்.
ஜாதிக ஹெல உறுமய 2 இலட்ச வாக்குகளை பெற்று கொடுத்தது. மைத்திரிபால சிறிசேன 3 இலட்ச வாக்குகளை கொண்டு வந்திருக்கலாம்.அப்படி பார்த்தால் மொத்தமாக 17 இலட்ச வாக்குகள்.
அதன் பின்னர் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் அனைவரும் 7 இலட்ச வாக்குகளை வழங்கினர்.அப்போது 24 இலட்ச வாக்குகள்.
அது மாத்திரமல்லாது வட,கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சிறுபான்மையினத்தவர்கள் 15 இலட்ச வாக்குகளை வழங்கியிருந்தனர்.
இப்போது 39 இலட்ச வாக்குகள், அப்படியென்றால் இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் கிடைத்திருப்பது வழமையாக கிடைக்கும் 23 இலட்ச வாக்குகள் மாத்திரமே.
ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
