பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் தொடர்புகளை பேணியதாக வௌியான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என சில நடிகைகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
நடிகைகளான ஷேமினி இத்தமல்கொட மற்றும் லோசனா இமாசி உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சாட்சிகளுடன் நிறூபிக்க முடிந்தால் மட்டுமே தம்மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும் என இங்கு கருத்து வௌியிட்ட நடிகை ஷேமினி இத்தமல்கொட சுட்டிக் காட்டினார்.
மேலும் அண்மையில் விபச்சார விடுதியொன்றில் இருந்து நடிகைகள் சிலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டன. நாம் அறிந்த வரையில் அதில் பிரபல நடிகைகள் எவரும் இல்லை, உண்மையில் அங்கு நடிகைகள் இருக்கவில்லை. இவ்வாறான வேளைகளில் நடிகைகள் என்ற வசனத்தை ஊடகங்கள் சுவாரஸ்யத்திற்காக பயன்படுத்துகின்றன. இது எங்கள் வாழ்க்கையை பாதிக்கின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
