ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு கிரான் பிரதேச வாவியில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து கரையொதுங்குகின்றன.
கிரான், தோணிமடு, கும்புறுமூலை மற்றும் கிண்ணையடி வரையிலான சுமார் ஏழு கிலோமீற்றர் வாவியில் மீன்கள் இறந்து கரையொதுங்கிவருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலாங்கு, சள்ளல், ஐதல், முரலி, திரளி, கெழுத்தி மற்றும் சிலிந்தல் போன்ற மீன் இனங்கள் இறந்து கரையொதுங்குவதனால் வாவியோரம் துர்வாடை வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏஏ பரீட் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
மீனவர்கள் தெரிவித்த தகவலின்படி வாவியோரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளதை அவதானிக்கமுடிகிறது. இதற்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது. இறந்த மீன்கள் மற்றும் வாவி நீர் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து நாரா நிறுவனத்திற்கு பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பியுள்ளோம். அறிக்கை கிடைத்த பின்னரே மீன்கள் இறந்தமைக்கான காரணத்தை உறுதியாகக் கூறமுடியும் என்றார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)