ஏஎம் றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் அண்மைக் காலமாக இடம்பெற்று வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாகக் கருதப்படும் மூவரங்கிய கோஸ்டியொன்றை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்து பல மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்களும் மீட்ககப்பட்டுள்ளன.
வாழைச்சேனை- கிண்ணயடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவா என்றழைக்கப்படும் ஜீவாநந்தன் என்பவரின் தலைமையிலான கொள்ளைக் கோஸ்டியின் மூன்று பேர் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மட்டக்களப்பு, ஏறாவூர், கல்குடா மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். திப்பட்டுமுனிவ தெரிவித்தார்.
இச்சந்தேக நபர்களின் வீடுகளிலிருந்து தொலைக்காட்சிப்பெட்டி, கணனி, கைத்தொலைபேசி, மடிகணனி, ஐ பட், சீடி பிளேயர், சாஐசர்லைட், அயன் பெட்டி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில்நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் மே மாதம் 6 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனைப் பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எல் அமரசேகர தலைமையில் பொலிஸ் சார்ஜண்டுகளான 22823 ஏ.எம். விஐயரத்ன, 21688 ஏ.பீ.ஏ. மஹதிர், 22869 எம்.ஏஸ்.ஏ ஜுனைட் பொலிஸ் கான்ஸ்டப்பிள்களான 46604, ஏ.எம்.ஆர்.பி. அதிகாரி மற்றும் 71726 ரீ.எம் வட்டுகெதர ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)