மனித நேயமற்ற அதிகாரிகளே.... மனிதப்புனிதர்களே இது உங்கள் கவனத்திற்கு..!! ஒரு குமரியின் அழுகுரல்

ன்று ஒவ்வொரு அரசியல் வாதிகளின் வீடுகளும் நிறம்பி வழிகிறது. பல்கலைக்கழகம் படித்து முடித்து பட்டம்பெற்று பதவி எடுத்தவர்கள் அரசியல்வாதிகளைத் தேடி ஓடவேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தன் மகளை தனிமையில் பக்கத்துக் கடைக்கு அனுப்ப பயந்து மேல் வீட்டுப் பெண்ணை அழைத்து கடைக்கு அனுப்பி பொருட்கள் பெற்றுக்கொள்ளும் கேவலமான முறை இன்று கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

இரக்க குணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். அதிலும் இரக்க குணமில்லாதவர்கள் மனிதனாக இருக்கவோ, சமூகத்தில் வாழவோ முடியாது. அதிலும் ஒரு அரச நிருவாக உத்தியோகத்தராக இருப்பதென்பது சொல்லவும் தேவையில்லை.

மனம் வேதனையடைகிறது!
கண்ணீர் வருகிறது!!
நெஞ்சு வெடிக்கிறது!!
உயிர் பிரிகிறது, இன்றைய அழுகுரல்கள் கேட்கும்போது. ஏன் மனிதனாகப்பிறந்தோம், அதிலும் ஏன் பெண்ணாகப்பிறந்தோம் ஆணாகப்பிறந்திருந்தால் நண்பர்களுடன் பாதையில் நின்று கதைத்து நின்றுவிட்டு ரூமுக்குப்போனால் நேரம் போயிவிடும் என்று இருக்கலாம். ஆனால்  நாங்கள் சிறையில் அல்லவா இருக்கிறோம் என்று அழுது புலம்பும் குமரிகளின் நிலமைதான் மிகவும் கவலைக்கிடம்.

ஆமாம் என்ன சொல்ல இவ்வளவு நேரம்:
விடையத்துக்கு வருகிறேன். படித்து முடித்து பதவிகள் கேட்டுப்போனால் நாங்கள் பதவியில் அமர்த்தும் இடங்களுக்குத்தான் போகவேண்டும். என்று கேட்கும் அதிகாரிகளே.. நியாயமான கேள்விதான் ஏற்றுக் கொள்கிறோம்..
அதற்காக  குற்றம் செய்த கைதிக்கு கொடுக்கும் தண்டனையையும் விட மேலாக...
 வீட்டில் இருந்து கன மைல் தூரம், பல மணி நேரம் பயணித்து குடும்பமிழந்து வாரத்தில் ஒருநாள் வீட்டவரும் தூரமான இடங்கள்தான் இருக்கிறதா..?
ஏன் சொந்த மாவட்டத்தில் பிறிதொரு பிரதேசத்தில் வேலையில்லையா..?
அண்மித்த ஊர்களில் ஆட்களில்லையா..? அங்கு படித்தவர்களுக்குப் பஞ்சமா..?
அந்த ஊரின் பக்கத்து பிரதேசத்தில் படித்து பதவிகள் வகிப்போரை எங்கே அனுப்பியிருக்கிறீர்கள். நிதானமிளந்து இடம்போடுகிறீர்களா..?

சிந்தியுங்கள், சரிபாருங்கள், உங்கள் மகள்களுக்கு இந்த நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். படைத்தவன் மிக மோசமாக தண்டித்து விடுவான். படைத்தவனைப்பயந்து கொள்ளுங்கள். இன்று அம்பாரை மாவட்டத்தில் ஒரு மூலையில் இருக்கும் ஒரு இளம் குமருப்பெண்னை தன் குடும்பமே இல்லாத அதிலும் தன் சமூகத்தைக்காணாத ஓரிடத்தில் ஒரு இளம்பெண்ணை வேலைக்கமர்த்தினால் அவளின் நிலமையென்ன..?
அவள் எங்கே போவாள், யாரிடம் கதைப்பாள், பல மாதம் பைத்தியமாய் அலைந்து தனக்கு பதவியே வேண்டாம் என்ற விரக்தியான தன்மையை ஏற்படுத்தும் நிலமை உருவாகிறது. அல்லவா..?

திருமணம் முடித்த பெண்னை 200 கிலோமீற்றர் தூரமான இடத்துக்கு வேலைக்கமர்த்தினால் அவளின் வாழ்க்கையின் படிக்கட்டு வெறும் வெடிக்கட்டாக மாறிவிடுகிறது, திருமணம் முடித்து சிலமாதம் வாழ்க்கையின் படிக்காய் உழைக்கும் நேரமோ வாழ்நாளில் 95 வீதம் என்றால்..
 வாழ்க்கை எங்கே! குடும்பம் எங்கே!! யோசனைக்கும் நேரம் வேண்டும், யோசிக்கவும் காலம் வேண்டும், பதவிகள் தருபவன் படைத்தவன். அவனுக்கும் பயப்பட வேண்டும். நாஷ்திகனாக இருந்தாலும் சிந்தனா சக்தி மூலம் செயல் முறையிருக்கும்.
 இன்று எதுவுமே இல்லாத அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதிகரித்து படிப்பின் மகத்துவமோ குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட கேவலமான நிலமையை யாரிடம் சொல்வது.

அம்பாரை யுவதிக்கு திருகோணமலைக்கும், திருகோணமலை யுவதிக்கு பொத்துவிலுக்கும் நியமனம் வழங்குவது நியாயமானதா...?
அம்பாரை என்றால் அம்பாரைக்குள்ளும், திருகோணமலை என்றால் திருகோணமலைக்குள்ளும், மட்டக்களப்பு என்றால் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள்ளும் நியமனம் வழங்க ஏன் முடியாது.

ஒவ்வொரு மாவட்டமும் பிரிந்து பரந்து ஆளணித்தட்டுப்பாட்டில் தவிக்கும்போது, வெளிமாவட்ட ஊஞ்சலாட்டம் நியாயமானதா..? அதிகாரிகளுக்கு இலாபம் தருகிறதா..? 
அப்படித்தான் நியமனம் கிடைத்தாலும் அரசியல் அந்தஷ்த்துள்ளவர்கள் உடனடியாக சொந்த ஊருக்கு மாறிச்செல்கிறார்கள். ஆனால் யாரையுமே தெரியாத அப்பாவி குமரிகளும், குமரர்களும் சிறைக்கைதியாக குடும்பமும் ஊருமிளந்து அப்பாவியாக இருக்கின்றனர்.. இது என்ன நியாயம் மனம் கேட்கிறதா..? உள்ளம் இடமளிகிறதா..? சற்று அல்ல நிறைவாக சிந்திக்க வேண்டும்.  சிந்தியுங்கள் செயல் படுங்கள் மனிதனாக வாழநினைத்தால் வெளிமாவட்டங்களில் அநாதையைப்போன்று வாழும் உறவுகளுக்கு பதில் சொல்லுங்கள்.

மனந்திறந்து வேலை செய்யுங்கள், உங்கள் மனைவி மக்கள் உங்களுக்கு சான்று பகர்வார்கள். நாங்களும் பெண்கள்தான் உங்கள் மகள்களைப்போன்றும், உங்கள் மனைவிகளைப்போன்றும் பலர் அலைந்து திரிகிறோம்.. எங்கள் பாவம் உங்களை சும்மா விடாது... எங்கள் களைப்பு உங்களை வாழ விடாது.. எங்கள் துக்கம் உங்களைத் தூங்க விடாது..
எங்களை இடமாற்ற மனமில்லை என்றால் நீங்களே மிரண்டு ஓடுங்கள் முடிந்த பதவியைச் செய்யுங்கள். எங்களையும் நின்மதியாக வாழ விடுங்கள்.

படைத்தவன் உங்களையும் என்னையும் பாதுகாக்க பிரார்த்திக்க வையுங்கள் திட்டித்தீர்க்க வைக்காதீர்கள் நாஷமாகப்போவீர்கள்.

 என்றும் அழுகுரலுடன் நான்கு வருடம் கடந்தும் இடமாற்றம் கிடைக்காத திருமணம் முடிக்கவும் முடியாத ஒரு அம்பாரை மாவட்ட குமரியின் கதையிது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -