எம்.ஏ. தாஜகான்-
அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 2015 அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ் மொழித்தினம் அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் நேற்று புதன் கிழமை 22 இடம் பெற்றது.
அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி கஸ்ஸாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய தமிழ் மொழித்தினப் போட்டியில் அட்டாளைச்சேனை கோட்டத்தில் காணப்படும் அனைத்துப் பாடசாலைகளும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அரங்க நிகழ்ச்சிகளுக்கு பிரதம நடுவர்களாக ஆசுகவி அன்புடீன், பாலமுனை பாருக், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் இப்றாகீம், மற்றும் திருக்கோவில் வலயம், பொத்துவில் கோட்டத்தின் ஆசிரியர்கள் என திறமையான நடுவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி மேற்பார்வை ஒழுங்குகளை அக்கரைப்பற்று வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ ஹனிபா, ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. சபுர்தீன் ஆகியோர் மேற்கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)