நிந்தவூரில் கிராம சேவககர்களின் கவனயீர்ப்புப் போராட்டம்!

சுலைமான் றாபி,றபீக் பிர்தௌஸ்-

ரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்க ஊழியர்களுக்கு மானிய விலையில் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் வழங்கப் பட்டுக்கொண்டிருக்கும் வேளை தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டமும், அதில் உள்ள சில வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கிராம சேவகர்களுக்கு இன்னமும் சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமையை கண்டித்து இன்று (22) காலை நிந்தவூர் பிரதேச செயலகத்தின் முன்னால் நிந்தவூர் பிரதேச கிராம உத்தியோகத்தர்களினால் கவனயீர்ர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

நிந்தவூர் கிராம உத்தியோகத்தர்கள் அமைப்பின் தலைவரும், கிராம சேவை உத்தியோகத்தருமான யு.எல்.எம். ஜசூலி தலைமையில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள் பெற உரித்தில்லையா? அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் கிடைக்காதது ஏன்? ஜனாதிபதி அவர்களே..! அம்பாறை மாவட்ட கிராம உத்தியோகத்தர்களை பற்றியும் சிந்தித்து பாருங்கள்..! இலங்கை வரைபடத்தில் அம்பாறை மாவட்டம் இல்லையா? கிராம மக்களின் தேவையறிந்து செயற்படும் எங்களுக்கா இந்த அநியாயம்..? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணமாகவும், கறுப்புப்பட்டி அணிந்தும் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துச் சென்றனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜா ஆகியோர்களிடத்தில் விஷேட மகஜரும் கையளிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -