எம்.ஏ. தாஜகான்-
அம்பாரை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் உலக நீர் தினத்தை முன்னிட்டு பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் உயர்தர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (30) அல் இர்பான் மகளிர் கல்லூரியின் கணனிக் கூடத்தில் இடம் பெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்க்கு பொத்துவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சிறிவர்த்தன மற்றும் அம்பாரை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் வளவாளராக கலந்து கொண்டனர். இவ்வருடத்திற்கான உலக நீர் தினத்தின் தொனிப்பொருள் 'நீரும் நிலையான அபிவிருத்தியும்' என்பதாகும்.
இந்நிகழ்வில்; நீரை எவ்வாறு சிக்கனப்படுத்தல், நீர் மாசடைவதை எவ்வாறு தடுத்தல், நீர் முகாமைத்துவத்தை எவ்வாறு மேற் கொள்வது என்பது பற்றிய விளக்கங்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)