பொத்துவிலில் ஆசிரியர் இடமாற்ம்,மாணவர் சமூகத்திற்கு துரோகம்-மௌலவி ஏ.முகைதீன்பாவா!

எம்.ஏ. தாஜகான்- 
திலீடுகள் இன்றி பொத்துவிலில் ஆசிரியர் இடமாற்றத்தை செய்திருப்பது மாணவர் சமுதாயத்தினருக்கு செய்த பாரிய துரோகச் செயலாகும் என்று பொத்துவிலின் முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினரான மௌலவி ஏ.முகைதீன்பாவா தெரிவித்தார். 

பொத்துவிலில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்திக்க கோரி கிழக்கு மாகாண ஆளுனருக்கும், கரையோர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம். அப்துல் மஜித் அவர்களுக்குமான அறிக்கையினை சமர்ப்பித்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற பொழுதே;

பொத்துவில் கோட்டத்தில் 20 பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்தப்பாடசாலைகளில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் பொழுது மீண்டும் பதிலீடுகள் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத நிலையாகும். இடமாற்றத்துக்குரிய ஆசிரியர் நிரப்பும் பொழுது தடையாக இருக்கும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் தவம் புரிந்து கொள்ள வேண்டும்.

பொத்துவில் மத்திய கல்லூரியில் 07 ஆசிரியர்களும், அல் இர்பான் மகளிர் கல்லூரியில் 06 ஆசிரியர்களும், அல் இஸ்ராக் வித்தியாலயத்தில் 05 ஆசிரியர்களும், அல் கலாம் வித்தியாலயத்தில் 06 ஆசிரியர்களும்,  அல் அ க்ஸா வித்தியாலயத்தில் 06 ஆசிரியர்களும், அல் பஹ்ரியாவில் 02 ஆசிரியர்களும், ஹிஜ்ரா வித்தியாலயத்தில் 02 ஆசிரியர்களும் அல் மினா வித்தியாலயத்தில் 03 ஆசிரியர்களும், தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் 04 ஆசிரியர்களும், அப்சான் வித்தியாலயத்தில் 02 ஆசிரியர்களும், மினாறுல் உலூம் வித்தியாலயத்தில் 01 ஆசிரியரும் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் 04 ஆசிரியர்களும், அஸ்ரப் வித்தியாலயத்தில் 01 ஆசிரியரும் உட்பட மொத்தமாக 49 ஆசிரியர்களை உடனடியாக நியமித்தால் ஓரளவு ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யலாம். 

எனவே குறித்த ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்கின்ற பொழுதே மாணவர்களுக்கான உடனடித் தீர்வு கிடைக்கலாம். இதற்க்கு யாரும் தலையீடாக இருக்க வேண்டாம் என மன்றாட்டமாக கேட்டுக் கொள்கின்றேன் அத்துடன் இவ்விடயத்தில் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி அலுவலகம் ஒன்றிணைந்து உரிய தீர்வுக்காக வேண்டி முயற்சிக்க வேண்டும். இவ்விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சு ஊடாக பிரதமர், ஜனாதிபதிக்கும் கொண்டு செல்வதற்க்கு திட்டம் தீட்டியுள்ளோம். ஏன்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -