கார்ல் மாக்ஸ்-
கடந்த அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதியுடனும் அவரது புதல்வர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணிவந்த மின்னலானவர் இன்று புதிய ஜனாதிபதியின் புதல்வருடன் நெருங்கி பழக முயற்சிகளை எடுத்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவின் நெருக்கத்திற்குரிய இவரின் இந்த திடீர் பாய்ச்சல் இவரும் ஒரு அரசியல் வாதிதான் என்பதை நிருபித்துள்ளதாக அரசியல் அவதானிகளும் குறிப்பிடுகின்றனர்.
கடந்த ஆட்சியில் மின்னலானவரை கண்டால் அரசியல்வாதிகளுக்கு கடும்பயமாம். தனக்கு பிடிக்காதவர்களை பற்றி ஜனாதிபதியுடன் கட்டுக்கதைகளை புனைந்துவிடுவதுடன் விசேடமாக முஸ்லிம் பிரதிநிதிகளை மின்னலான நிகழ்ச்சிக்கு அழைத்து அரசியல் கேள்விகள் என்ற கோதாவில் அவர்களை அவமானப்படுத்தி முஸ்லிம்களிடத்தில் நான் உங்கள் பாதுகாவலன் என்ற மாயையை தோற்றுவித்து வந்தார்.
இதனால் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இவர் என்றால் கடும் பயம். இந்தப் பயத்துடன் வாழ்ந்த இலங்கை கிராமத்தின் முஸ்லிம் அரசியல் வாதிகள் அன்று அலரிமாளிகையில் மின்னலானவருக்கு கிடைத்த இடிகளால் மின்னலானவர் மீதுள்ள பயங்கள் தெளிந்து இன்று சொல்கிறார்களாம் பேய் அவ்வளவு கருப்பில்லை என்று.
மகிந்த ராஜபகசவிடம் பல வேடங்களை போட்ட மின்னலானவர் ஆட்சி மாறியதனால் மிகவும் சோகத்துடன் இருக்கிறாராம். இந்த சோகத்தை ஈடுகட்டுவதற்கும் தனது அரசியலை பாதுகாக்கவும் புதிய திட்டம் ஒன்றை வரைந்துள்ளார் மின்னலானவர்.
இலங்கை அரசியல் வட்டாரத்தில் நன்கு செல்வாக்குள்ள அந்த மகாராசனைக் கொண்டு பிரதமரிடம் கடந்த மாதம் ஒரு தூது ஒன்றை அனுப்பினாராம் . அதாவது மின்னலானவருக்கு புதிய அரசில் ஒரு பிரதியமைச்சுப் பதவி ஒன்றை வழங்க வேண்டும் என்பதுதான் திரு மகாராசனின் கோரிக்கை. எனினும் நல்லாட்சியாளர்கள் இவரை உள்வாங்க மறுத்துவிட்டார்களாம் என்று மேலதிக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதனால் நானே களத்தில் இறங்குகிறேன் என சபதம் விட்டுள்ள மின்னலானவர் ஜனாதிபதி மைத்திருக்கு நெருக்கமானவர்களை அணுகி வறுகிறாராம்.
இது இவ்வாறிருக்க கடந்த உள்ளுராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மின்னலானவரின் கட்சி உலகில் அதி குறைந்த வாக்குகளைப்பெற்ற கட்சி என்ற பட்டியலில் முதலாம் இடத்தில் இருக்கிதாம். இவருடைய கட்சி தேர்தலில் போட்டியிட்டு மொத்தமாக 152 வாக்குகளையே; பெற்று சாதனை படைத்தது. (இவரது கட்சி பெற்ற வாக்குகளை அதிகப்படுத்தி கூறிவிட்டேனோ தெரியவில்லை.)
இதனை ஏன் நான் நியாபகம் செய்கிறேன் என்றால் நாட்கள் மிக வேகமாக நகர்ந்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டார்கள்.
இந்நிலையில் மின்னலானவரின் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளின் உலக சாதனையை புதுப்பிக்க இந்த தேர்தலிலும் களமிறங்க தயாரா என முல்லை மக்கள் கேள்வி கேட்கிறார்களாம்.
.jpg)
.jpg)